முதல்வர் பிரசார கூட்ட மேடை அமைச்சர் பொன்முடி ஆய்வு

2565பார்த்தது
முதல்வர் பிரசார கூட்ட மேடை அமைச்சர் பொன்முடி ஆய்வு
விழுப்புரத்தில் பங்கேற்கவுள்ள முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்திற்கான மேடையை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம், கடலுார் லோக்சபா தொகுதி 'இண்டியா' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் வரும் 5ம் தேதி விழுப்புரம் வருகிறார். இதற்காக விக்கிரவாண்டி அடுத்த வி. சாலையில் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை வழங்கினார். கவுதம சிகாமணி எம். பி. , வேட்பாளர் ரவிக்குமார், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், மாவட்ட தலைவர் பாபு ஜீவானந்தம், மாவட்ட அமைப்பாளர் தமின், பிரதிநிதி திலகர், நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெயபால் உட்பட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி