கெடார் அருகே அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது

57பார்த்தது
கெடார் அருகே அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12 மணி அளவில் உச்சி கால பூஜை நடைபெற்றது. முன்னதாக பாலாம்பி அம்மனுக்கும், பாலேஸ்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து வாழைப்பூ கலச பூஜையும், கடன் நிவர்த்தி பூஜையும், நேர்த்திக்கடன் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாகி சம்பத், அர்ச்சகர் கோபி ஆகியோர் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி