காவல் துறை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற, விழுப்புரம் சரக காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை டி. ஐ. ஜி. , பாராட்டினார். விழுப்புரம் சரக காவல்துறைக்குட்பட்ட கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், கோவையில் நடந்த மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றனர்.
கடலுார் நகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் பரிசும், 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் பரிசும் வென்றார்.
தலைமைக் காவலர் அன்வர்அலி குண்டு எறிதல் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றார். இதே போல், அமைச்சுப் பணியாளர்கள் முருகராஜன், ஆனந்தகுமார், சங்கர், பரந்தாமன், எமிலியட் ஆரோக்யமேரி, இந்திரா, பரிமளா, புவனேஷ்வரி, பிரகாஷ், முத்துசாமி, சுந்தர், ஜஸ்டின் ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றனர்.
பதக்கம் வென்ற காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், டி. ஐ. ஜி. , திஷா மிட்டலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.