மயிலம் - Mailam

2 பேருந்துகள் - 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

2 பேருந்துகள் - 6 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

திண்டிவனத்தில் பெய்த திடீர் மழையால் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள், ஆறு கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நேற்று காலை திடீரென்று மழை பெய்யத் துவங்கியது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சாலை பிசுபிசுப்புடன் காணப்பட்டதால் திண்டிவனம் அடுத்த செண்டூர் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து அதைத் தொடர்ந்து வந்த தனியார் பேருந்து மேலும் பின் தொடர்ந்து வந்த மூன்று கார்கள் என அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட 500 மீட்டர் தொலைவில் மீண்டும் அடுத்தடுத்த மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் 6 கார்கள் என அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் வாகனங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலம் போலீசார் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகி நின்ற வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా