செஞ்சியில் முத்திரைத் தீர்வை இழப்பு கட்டணம் வசூல் முகாம்

59பார்த்தது
செஞ்சியில் முத்திரைத் தீர்வை இழப்பு கட்டணம் வசூல் முகாம்
செஞ்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் முத்திரைத்தீர்வை இழப்புக்கட்டண வசூல் சிறப்பு முகாம் நடந்தது. தனித்துணை ஆட்சியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் மாவட்டப்பதிவாளர் கல்பனா, தணிக்கை மாவட்டப்பதிவாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். செஞ்சி சார்பதிவாளர் எல்லைக்குட்பட்ட 20 ஆவணங்களுக்கான முத்திரைத்தீர்வை இழப்புக்கட்டணம் ஆவணதாரர்களிடமிருந்து பொறுப்பு சார்பதிவாளர் சீனிவாசன் வசூல் செய்து தீர்வு கண்டார். பணியாளர் சங்க திண்டிவனம் பதிவு மாவட்ட தலைவர் சடகோபன் மற்றும் வருவாய்த்துறை, பத்திரப்பதிவு துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி