வேலூர்: காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா!

2957பார்த்தது
வேலூர்: காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா!
வேலூர் சின்ன அல்லாபுரம் கே. கே. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவரது மனைவி பிரியதர்ஷினி (20). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரியதர்ஷினி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதனிடையே புகார் அளிக்க வந்திருந்த பிரியதர்ஷினி திடீரென காவல் நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.இதைப் பார்த்த போலீசார் அவரை அழைத்து மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் தர்ணாவில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து அவர் தர்ணாவை கைவிட்டார்.

தொடர்புடைய செய்தி