வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் கட்டிடங்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அந்தக் குரங்குகள் பொதுமக்கள், அரசு அலுவலர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அரசு அலுவலக வளாகத்தில் கிடக்கும் குப்பைகளை அள்ளி வீசுகிறது. அரசு அலுவலர்கள், பொதுமக்களை அச்சுறுத்துகின்றன.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடைகளில் இருந்து பால்பாக் கெட்டுகள், இனிப்புகள் போன்ற உணவுப் பொருட்களை எடுத்து செல்கின்றன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.