உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்

67பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ. பூசாராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னில வகித்தார். செயல் அலுவலர் ரேவதி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வரவு, செலவு மற்றும் ரூ. 33. 60 லட்சம் மதிப்பிலான பணிகள்
உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆ. செல்வராஜ், ஏ. மரியஜோசப், ஜி. சரவணன், எம். பரிமளா, ஆர். மகேஸ்வரி, எம். கீதா, பி. முனியம்மாள் பி. சந்தியா, ஆர். ரஜினி, வி. ஆர். கா. சரவணன், ஏ. ரமேஷ், கே. லில்லி, எம். சுகன்யா, எம். கீதா, சந்தியா, வி. ஆர். சரவணன், ஏ. ரமேஷ், ஆர். மகேஸ்வரி, உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி