எஸ்பிஐ ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி.

55பார்த்தது
*திருப்பத்தூர் அருகே நள்ளிரவில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தை உடைத்து நொறுக்கி கொள்ளை முயற்சி செய்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பிடித்து போலீசார் விசாரணை. *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அணையா விளக்கு பகுதி அருகே எஸ் பி ஐ ஏ டி எம் மையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் இரண்டு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்தை அடித்து உடைத்து நொறுக்கி கொண்டிருந்தபோது அவ்வழியாக ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நகர போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்ததில்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கணியம்பாடி பகுதியில் வசிப்பவர் சக்திவேல் என்பதும் முன்னுக்கு பின் முரணாக பேசி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி