வேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், அம்மாவுடைய இயக்கத்தை கையகப்படுத்தி வைத்து இருக்கும் துரோகளிடம் இருந்து கட்சியை மீட்போம் மேலும் காட்சிக்கு துரோகம் செய்தவர் ஈபிஎஸ் என்றும், தற்போது ஒரு சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை. கூட்டணி அமைந்த பிறகு யாருடன் கூட்டணி அமைந்துள்ளது என்ற முடிவு பிறகு தெரிவிப்போம்.
எடப்பாடியிடம் இருப்பது தவறு என்பதால் தான் அவரிடம் இருந்து ஓபிஎஸ் விலகினார். மீண்டும் மீண்டும் அதை பற்றி கூறிகொண்டு இருக்க முடியாது. மீண்டும் அம்மாவின் ஆட்சி கொண்டுவருவோம், அவர்களிடம் இருந்து கட்சியை மீட்போம் எண்று கூறி சென்றார்.