தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “தமிழ்நாட்டு மக்களை தி.மு.கவும், மு.க. ஸ்டாலினும் திசை திருப்ப கூடாது. மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டு மக்களுக்கான பட்ஜெட். இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது எனக் கூறுவது தவறு” என்றார்.
தொடர்ந்து, கம்யூனிஸ்டுகள் தொடர்பான கேள்விக்கு, மின்சார கட்டணம் முதல் பல்வேறு கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் ஏன் கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்தவில்லை? என்றார்.