காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக விருதம்பட்டு போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காங்கேயநல்லூர் பாலாற்றில் மணல் கடத்திய 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.