பாஜக வேட்பாளரை ஆதரித்து நடிகர் சுந்தர். சி தீவிர பிரச்சாரம்!

2966பார்த்தது
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி, கருணீக சமுத்திரம், உள்ளி, சிங்கிள்பாடி, ஏ. மோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இயக்குனரும் நடிகருமான சுந்தர். சி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் மற்றும் சுந்தர் சி ஆகியோருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வேட்பாளர் ஏசி சண்முகம் அளித்த பேட்டியில், "வேலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி சுமார் 14, 500 இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். அதில் 5, 500 பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள். சுமார் 15, 000 குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து விளக்கு ஏற்றி வைத்துள்ளேன். இது வெறும் பத்து மாத உழைப்பு மட்டுமே. ஆகவே வெற்றி பெற்று ஐந்தாண்டு காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை வேலூர் பாராளுமன்றத்தில் ஏற்படுத்துவேன். தேர்வில் தோல்வியடைந்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்கள் என அனைவருக்கும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என அனைத்திலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன் என்றார்.

தொடர்புடைய செய்தி