வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி இருவர் கைது

1555பார்த்தது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி இருவர் கைது

வேலூர் மாவட்டம் நேற்று காலை வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கத்தி காட்டி மிரட்டிய இருவரையும் பிடித்து காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற காட்பாடி காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் விருதம்பட்டு டி கே புரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த நவீன் குமார்.‌இதில் ராஜேஷ் பாஜக தொழில்நுட்ப பிரிவில் மாவட்ட செயலாளராக இருப்பதும், நவீன் குமார் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது. பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டிய பாஜக பிரமுகர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி