ஆட்டுச் சந்தையில் இந்த வாரம் ஆடுகள் விற்பனை மந்தம்

54பார்த்தது
வேலூர் மாவட்டம்

*கே. வி. குப்பம் ஆட்டுச் சந்தையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை மந்தம்*

வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் சந்தை மேடு பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்

அதேபோல் நேற்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நெல்லுார் கிடா ஆடுகள் என பல்வேறு ரக ஆடுகள் வரத்து என 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

பெரிய இதில் பெரிய ரக ஆடுகள் 16, 000 முதல் 20 ஆயிரம் வரையும் சிறிய ரக ஆடுகள் 7000 முதல் 10 ஆயிரம் வரையும் விலை போனது

ஆடுகள் வரத்தும் வியாபாரமும் அதிக அளவில் இல்லை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி