*காட்பாடியில் 2024ஆம் ஆண்டு வேலூர் மாவட்ட எஸ்பி கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார் *
*மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வாங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த பொதுமக்கள்*
வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 940 காவலர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தீவிர இரவு ரோந்து பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து காட்பாடி சித்தர் பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு டிஎஸ்பி பழனி மற்றும் ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 12 மணி அளவில் வாகனத்தடைக்கு சோதனையை மேற்பார்வையிட வந்த வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சித்தூர் பேருந்து நிலையத்தில் கேக்கை வெட்டி இனிப்புகள் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் உடன் காட்பாடி உதவி ஆய்வாளர் கார்த்திக் மாற்றும் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் இருந்தனர்.