பொன்னைப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

1547பார்த்தது
காட்பாடி தாலுகா பொன்னைப் பகுதியில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தமிழ்நாடு ஆந்திர எல்லை பகுதி மற்றும் பொன்னை பகுதியில் சூறைக்காற்றுடன் பிற்பகல் 2 மணி அளவில் கரு மேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பொன்னை சுற்றுப்புற பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவியது கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட குளிர்ச்சியான சூழலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி