கொட்டிய கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

74பார்த்தது
வேலூர் மாவட்டம்

*வேலூரில் நள்ளிரவில் 37. 82 மில்லி மீட்டரில் கொட்டிய கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி*

*குடியாத்தம் வளத்தூர் பகுதியில் கால்வாயை சீரமைக்க கோரிக்கை*

வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே. வி. குப்பம், ஒடுக்கத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. சராசரியாக 37. 82 மில்லி மீட்டர் மலை பதிவாகியிருந்தது.

இதனிடையே நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியில் பெரியார் நகரில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்

மேலூம் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகாதவாறு இப்பகுதியில் உள்ள கால்வாய்களை உடனடியாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

இதேபோல வேலூர் மாநகருக்குட்பட்ட 40 வது வார்டு கஸ்பா டிட்டர்லைன் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் டேங்கர் லாரிகள் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி