நாட்டறம்பள்ளி: 2 பசுமாடுகள் சாவு!

64பார்த்தது
நாட்டறம்பள்ளி: 2 பசுமாடுகள் சாவு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலையொட்டி முத்துராயர் கோவில்மேடு என்ற இடத்தில் வெண்ணிலா (40) என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருடைய கணவர் இறந்து விட்டார். இவர் 2 பசுமாடுகளை வைத்து பால் கறந்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இவருடைய நிலத்தை ஒட்டி தனியார் கிரானைட் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கம்பெனியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெண்ணிலா பசுமாடுகளை கம்பெனியை சுற்றி போடப்பட்டுள்ள கம்பி வேலியில் கட்டியுள்ளார்.

அப்போது அந்த மாடு திடீரென மயங்கி விழுந்து இறந்து கிடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று அதே போன்று மற்றொரு பசுமாட்டை கட்டி வைத்தார். அந்த பசுமாடும் அதேபோன்று மயங்கி விழுந்து இறந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பி வேலியில் கட்டப்பட்டிருந்த 2 பசுமாடுகள் அடுத்தடுத்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி