ஆற்காடில் கலாம் கனவு விருது வழங்கும் விழா

84பார்த்தது
ஆற்காடில் கலாம் கனவு விருது வழங்கும் விழா
ஆற்காடு மண்டபத்தில் ஏ. பி. ஜே. அறக்கட்டளை தலைவர் கோபி தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அறக்கட்டளைக்கு பெரிதும் உதவி வரும் முக்கிய பிரமுகர்களுக்கு கலாம் கனவு விருது-2023 என்ற தலைப்பில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் அறக்கட்டளையின் 2024-ம் ஆண்டிற்கான இதழை ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆகியோர் வெளியிட, அறக்கட்டளை தலைவர் கோபி பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் லட்சுமணன், மாவட்ட வணிகர் சங்க தலைவர் சரவணன். ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக் டர் விநாயகமூர்த்தி, மாவட்ட ரோட்டரி தலைவர் பரத்குமார், தொழிலதிபர்கள் சவுகத் அலி, அக்பர் ஷரீப், அஜீஸ் ரகுமான், ஆற்காடு நகர மன்ற உறுப்பினர் ராஜசேகர், வணிக சங்க உறுப்பினர் பாஸ்கரன், அன்னை அறக்கட்டளை பெல். பிரபு, பசுமை இயக்கம் கணேஷ், ஜெயலலிதா பரத நடன ஆசிரியர் சரஸ்வதிபாபு மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி