நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை!

85பார்த்தது
நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு சிறப்பு பூஜை!
நெமிலி பாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது அன்னை பாலா புத்தாண்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனையை பாலா பீடநிர்வாகி மோகன்ஜி செய்து அனைவ ரையும் வரவேற்று பிரசாதம் வழங்கினார்.

கடந்த 2 நாட்களாக தொடர்பாராயண நிகழ்ச்சி குருஜி நெமிலி பாபாஜி தலைமையில் நடைபெற்றது. புத்தாண்டு சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் 2024-ம் ஆண்டின் முக்கிய நிகழ்ச்சிகள் அடங்கிய அட்ட வணை போஸ்டர். ஆத்மீக நாட்காட்டியையும் திரைப்பட பாடகர்கள் மது, சுதா ஆகியோர் வெளியிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தங்கள் இசைக்குழுவினருடன் மெல்லிசை பாடல்களை வழங்கினர். முன்னதாக திரைப்பட பாடகர் கார்த்தி, தான் எழுதிய சக்தி கொடு என்ற பாடலுடன் பக்தி இன்னிசை வழங்கினார். பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அன்னை பாலா ஆத்மீக குடும்பங்கள், பீட அன்பர்கள், நெமிலி இறை மன்ற அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி