வேலூரில் 31-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

56பார்த்தது
வேலூரில் 31-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்
வேலூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 31-ந் தேதி (சனிக்கிழமை) முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.

இதில் 75-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தொழிற்பயிற்சி, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, செவிலியர், உள்ளிட்ட பல்வேறு கல்வி தகுதியுடைய இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த முகாமினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.