வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் வேலூரை அடுத்த அல்லேரி, சின்னபாலம்பாக்கம், தெள்ளை மலைப்பகுதிகளில் சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனையை தடுக்க ரோந்து சென்றனர்.
அப்போது தெள்ளை மலைப்பகுதியில் சாராயம் விற்ற சிவநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38), சின்னபாலம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற திருத்தணியை சேர்ந்த மாணிக்கம் (39) ஆகியோரை கைது செய்தனர்.
2 பேரிடமிருந்து 140 லிட்டர் சாராயம், சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அல்லேரி மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 லிட்டர் சாராயம் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.