ஆம்பூர் அருகே தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

64பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காலணி தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது இதில் சுமார் 700 ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் போனஸ் மற்றும் சம்பளம், 4 வருட நிலுவை பி. எஃப் பணம் வழங்காததால் இன்று காலை முதல் தொழிலாளர்கள் காலனி தொழிற்சாலையின் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் நாளையும் நாளை மறுநாளும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி