மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் திடீர் ராஜினாமா

83பார்த்தது
மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் திடீர் ராஜினாமா
மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் தமது ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒதுக்காததால் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணியின் தொகுதிப் பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 17, நிதிஷ்குமாரின் ஜேடியூ 16, சிராக் பஸ்வானின் லோல் ஜன சக்தி கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 2 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி