தமிழ் நடிகரின் வீட்டில் சோகம்!

17557பார்த்தது
தமிழ் நடிகரின் வீட்டில் சோகம்!
நடிகர் ராமராஜனின் சகோதரி இன்று காலமானார். இது திரைத்துறை வட்டாரத்திலும், ராமராஜன் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடன்பிறந்த மூத்த சகோதரி புஷ்பவதி (75) இன்று மாலை மதுரை அருகே சொந்த ஊரான மேலூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். செய்தி அறிந்ததும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள ராமராஜன் மேலூர் விரைந்தார். நாளை மேலூரில் புஷ்பவதியின் உடல் நல்லடக்கம் நடைபெற உள்ளது. ராமராஜன் பல ஆண்டுகளுக்கு பிறகு "சாமானியன்" படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி