இன்றைய ராசி பலன் (19/02/2024)

44289பார்த்தது
இன்றைய ராசி பலன் (19/02/2024)
மேஷம்: இன்று சோர்வு மனப்பான்மையும் தேவையற்ற கவலைகளும் காணப்படும். எதையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. பணப்புழக்கம் சிறப்பாக இருக்காது. தேவையில்லாத செலவினங்களை சந்திக்க நேரும். உங்கள் தோள்களில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும். விஷயங்களை யதார்த்தமாக கையாள வேண்டும். உங்கள் நிதிநலைமை மோசமாக இருக்கும்.அதிகரிக்கும் செலவினங்கள் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். மன அழுத்தம் காரணமாக கழுத்தில் விறைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மிதுனம்: இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது போன்றவை நற்பலன்களை அளிக்கும். இன்று போதிய அளவு பணம் இருக்காது. அதனால் பிறரிடம் கடன் வாங்க நேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காய்ச்சலினால் தொந்தரவு ஏற்படலாம்.

கடகம்: இன்று சாதகமான நாள். நற்பலனகள் கிடைக்கக் கூடிய நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று நிதி வளரச்சி சிறப்பாக இருக்கும். இன்று உங்கள் சேமிப்பு உயரும். உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும். அதனால் தேக ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

சிம்மம்: இன்று அதிர்ஷ்டமான நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் திடமாகவும் காணப்படுவீர்கள்.

கன்னி: இன்று யதார்த்தமான அணுகுமுறை தேவை. செலவினங்கள்அதிகரித்து காணப்படும். தேவையில்லாத செலவினங்களை தவிர்க்க வேண்டும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். இன்று தொண்டையில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

துலாம்: இன்று குறைந்த வளர்ச்சியே காணப்படும். சவால்கள் நிறைந்திருக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது இன்று கடினமாக இருக்கும். பயணத்தின் பொழுது பண இழப்பு நேரலாம். கவனமாக கையாள வேண்டும். தலைவலிக்கான வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: இன்று நம்பிக்கையோடு காணப்படுவீர்கள். நற்பலன்கள் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வீட்டுப்பெரியவர்களிடமிருந்த பணம் பரிசாக கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று நல்ல ஆரோக்கியம் காணப்படுகின்றது.

தனுசு: உங்கள் முயற்சிகள் வெற்றியடைவதற்கு சாதகமான நாள். இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு நிலை அதிகரிக்கும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். சாதகமான சூழ்நிலை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மகரம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம். பயணத்தின் பொழுது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.சத்தான ஆகாரங்களை உட்கொள்ளுங்கள்.

கும்பம்: உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கும். வீட்டுச் சீரமைப்பிற்காக பணத்தை செலவு செய்வீர்கள். சளி மற்றும் இருமல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும்.

மீனம்: இன்று அனைத்து வகையிலும் முன்னேற்றம் காணப்படும். அதிக பணவரவு காணப்படும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். தேக ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

தொடர்புடைய செய்தி