இன்றைய ராசி பலன் (14/03/2024)

57688பார்த்தது
இன்றைய ராசி பலன் (14/03/2024)
மேஷம்: இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று குறைந்த அளவு பண வரவே இருக்கும். பண இழப்புகள் ஏற்படலாம். இன்று நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியாது. கால்வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். அதிகரிக்கும் செலவுகளால் கவலை ஏற்படும். திட்டமிட்டு கவனமாக பணத்தை செலவு செய்ய வேண்டியது அவசியம். உங்களுக்கு சளித் தொல்லை ஏற்படலாம். குளுமையான பொருட்களை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்: இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். இன்று நிதிநிலைமையில் வளர்ச்சி காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள். உங்கள் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியமும் மேம்படும்.

கடகம்: நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று உங்களுக்கு தாராளமான பண வரவு இருக்கும். இன்று நீங்கள் சிறந்த வேலைக்கான ஊக்கத்தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. நடப்பவற்றை இலேசாக எடுத்துக்கொண்டு உணர்ச்சி வசப்படாமல்இருக்க வேண்டும்.

சிம்மம்: ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். உங்கள் பணம் விரயமாகும். இன்று மன அழுத்தம் காரணமாக தலைவலி உபாதைக்கு ஆளாவீர்கள். அது உங்களுக்கு கவலை தரும்.

கன்னி: இன்று நீங்கள் பல தடைகளைக் கடந்த பிறகு உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள். இன்று அதிக அளவில் செலவுகள் ஏற்படும். உங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியிருக்கும். மன அழுத்தத்தின் காரணமாக தலைவலி உபாதைக்கு ஆளாக நேரிடலாம்.

துலாம்: இன்று நீங்கள் சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கான சமமான மன நிலையைப்பெறுவீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயர வாய்ப்பு இருக்கின்றது. இன்று நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். நிறைந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். குறைந்த முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். நிதிநிலையைப் பொறுத்தவரை சாதகமான நிலை உள்ளது. சேமிக்க வேண்டும் என்ற உத்வேகம் அதிகரிக்கும். இன்று தேக ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்கும். நல்ல திடமான ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிப்பீர்கள்.

தனுசு: இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்களுக்கு நிதி நிலையைப் பொறுத்தவரை அனுகூலமாக இல்லை. ஜீரணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மகரம்: உங்கள் எண்ணங்களை சரியான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தாதன் காரணமாக இன்று நீங்கள் சில பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். இன்று உங்களுக்கு நிதி நிலையைப் பொறுத்தவரை அனுகூலமாக இல்லை. இன்று நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். மனதில் பதட்டம் காணப்படும்.

கும்பம்: இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் பல வாயப்புகளை நீங்கள் இழப்பீர்கள். இன்று கூடுதல் செலவுகள் ஏற்படலாம். உங்களிடம் இன்று பணம் இருந்தாலும் அதில் நீங்கள் திருப்திஅடையமாட்டீர்கள். இன்று அஜீரணக் கோளாறுகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.

மீனம்: உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். இன்று நிதிநிலையைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமான நாள். மிக விரைவாக இன்று நீங்கள் பணம் சம்பாதித்து அதன் மூலம் திருப்தியடையும் வாய்ப்பு உள்ளது. இன்று திடமான ஆரோக்கியத்துடனும் நேர்மறை எண்ணங்களுடனும் காணப்படுவீர்கள்.

தொடர்புடைய செய்தி