இன்றைய ராசி பலன் (12/03/2024)

63791பார்த்தது
இன்றைய ராசி பலன் (12/03/2024)
மேஷம்: இன்று நீங்கள் பொறுமையிழந்து காணப்படுவீர்கள். பிரார்த்தனை மற்றும் வழிபாடு மூலம் ஆறுதல் பெறலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்க கவனமாக உரையாட வேண்டும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். பயணத்தின்போது பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

ரிஷபம்: இன்று இனிமையான தருணங்கள் காணப்படும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வர வாய்ப்புள்ளது. இன்று பண வரவு சிறப்பாக இருக்கும். கையிலிருக்கும் உபரி பணத்தை சேமிக்கும் வாய்ப்பு காணப்படும். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும். உங்களுக்கு எந்த ஆரோக்கியப் பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இன்று கூடுதல் நன்மைகள் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பண வரவு அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு ஆற்றல் உயரும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

கடகம்: இன்று சவால்கள் நிறைந்து காணப்படலாம். மனக் குழப்பங்களை எதிர்கொள்ள நேரலாம். பண வரவு குறைந்து காணப்படும். சூழ்நிலையை சமாளிக்க கவனமாக பணத்தை கையாள வேண்டும். அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெய் வகை உணவுகளை தவிர்ப்பதன் மூலம் இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்தலாம்.

சிம்மம்: இன்று சாதகமான நாளாக அமையாது. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். அதிக செலவுகள் கவலையை அளிக்கும். பல் வலி வர வாய்ப்புள்ளதால் இன்று பற்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி: இன்று மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். திரைப்படம் பார்த்தல், இசை கேட்டல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று சிறப்பான ஆரோக்கியம் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

துலாம்: இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் காணப்படுவீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத் தேவைக்காக பணம் செலவு செய்வீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் மனதில் இருக்கும் நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்: இன்று நீங்கள் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இன்று எடுக்காதீர்கள். இன்று அதிக செலவுகளால் வருத்தப்படுவீர்கள். இன்று உங்களால் சேமிக்க இயலாது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு: இன்று சிறப்பான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. என்றாலும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். அதிக செலவுகளை விவேகத்துடன் கையாள வேண்டும். உங்களிடம் பதட்டமான நிலை காணப்படும். இறை வழிபாடு மேற்கொள்வதன் மூலம் உங்கள ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நற்பலன்கள் நடக்கும் நாள். உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். இன்று அதிர்ஷ்டம் நிறைந்து காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

கும்பம்: இன்று உங்கள் வளர்ச்சி குறித்த கவலை காணப்படும். என்றாலும் தேவையற்ற விஷயங்களுக்கு வருந்தாதீர்கள். பண வரவு எதிர்பார்த்த அளவிற்கு காணப்படாது. இன்று நிதி சம்பந்தப்பட்ட எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க குளிர் பானங்களை தவிர்க்கவும்.

மீனம்: இன்று அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். பாதகமான பலன்களால் கவலை காணப்படும். பணத்தை கையாளும் போது கவனமான சிக்கனமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை காணப்படும்.

தொடர்புடைய செய்தி