இன்றைய ராசி பலன் (09/03/2024) சனிக்கிழமை

39069பார்த்தது
இன்றைய ராசி பலன் (09/03/2024) சனிக்கிழமை
மேஷம்: இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும். இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆறுதல் பெறுவீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பணம் அதிக அளவில் சேர்க்க இயலும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். கடவுள் அருளால் இன்று உங்கள் ஆரோக்கியம் ஸ்திரமாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு சாதகமான நன்மையான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் பரபரப்பாக காணப்படுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று பொதுவாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனம்: இன்று உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை காணப்படும். நீங்கள் பிறரை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். நிதிநிலைமை சிறிது ஏமாற்றத்தை அளிக்கும். பாதகமான விளைவுகள் ஏற்படாமல் இருக்க பண விஷயத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவேண்டியது அவசியம். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரலாம்.

கடகம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணப்புழக்கம் சிறிது ஏமாற்றம் அளிக்கும். அதிகரிக்கும் செலவுகள் காரணமாக கடன் வாங்க நேரலாம். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படலாம். தியானம் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம்.

சிம்மம்: இன்று உங்கள் நண்பர்கள் மற்றும் பரிச்சயமானவர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களின் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும். நிதிநிலைமை செழிப்பாக இருக்கும். உங்களின் சந்தோஷமான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கன்னி: இன்று சுமூகமான பலன்கள் கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். அனைத்து விதத்திலும் மகிழ்ச்சி காணப்படும். பூர்வீகச் சொத்து மூலம் பண வரவிற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் சேமிப்பில் கணிசமான தொகை சேரும். நீங்கள் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு சாதகமான நாளாக இன்று காணப்படாது. இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் அல்லது தள்ளிப்போடுதல் நல்லது. நிதி வளர்ச்சி மகிழ்ச்சிகரமாக இருக்காது. வரவு செலவு இரண்டும் கலந்து காணப்படும். தோல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். எண்ணெய் இல்லாத உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். பணத்தை கவனம்கக் கையாள வேண்டும். அதிக வேலை காரணமாக சோர்வு காணப்படும். தலை வலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

தனுசு: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பண வரவு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். கையிலிருக்கும் பணம் கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

மகரம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்க உகந்த நாள் அல்ல. இன்றைய சவால்களை திறமையுடன் சமாளிக்க பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். அதிக செலவுகள் சுமையாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்வீர்கள்.

கும்பம்: இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. அதிர்ஷ்டத்தை விட சுய முயற்சியை சார்ந்து செயல் பட வேண்டும். நிதி நிலைமை மகிழ்ச்சி கரமாக இருக்காது. அதிகரிக்கும் செலவுகள் உங்களுக்கு கவலை அளிக்கும். அமைதியின்மை காரணமாக மனதில் பதட்டம் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மீனம்: இன்று சற்று மந்தமாக காணப்படும். உற்சாகமான ஆற்றல் நிறைந்த போக்கு உதவிகரமாக இருக்கும். வீட்டுப் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள். அதனால் செலவுகள் அதிகரிக்கும். இன்று கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தொடர்புடைய செய்தி