இன்றைய மின்தடை அறிவிப்பு

107080பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு
கன்னியாகுமரி: முப்பந்தல் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவல்கிணறு தெற்கில் உள்ள மங்கம்மாள் சாலை, கண்ணுப்பொத்தை, குமாரபுரம், சுற்றுப்புற கிராமங்களுக்கும் மற்றும் காற்றாலைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

புதுச்சேரி: காரைக்காலில் இன்று (புதன்கிழமை) காலை10 மணி முதல் 4 மணி வரை பரமரிப்பு காரணமாக மஸ்தான்பள்ளி வீதி, சுன்னம்புகார வீதி, வரவுக்குட்டை வீதி, கணபதி நகர், லெமர் நகர், லெமர் வீதி, வள்ளல் சீதக்காதி வீதி, சின்னதம்பி நகர் மற்றும் கும்சகட்டளை, தருமபுரம், சமத்துவபுரம், புதுத்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தப்படும்.

தேனி: பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல், தேனி நகரம், குன்னுார், பழனிசெட்டிபட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மதுக்கூர், தாமரன்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

மதுரை: 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதன் காரணமாக இன்று முதல் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மதுரை மாநகரில் மின்தடை இருக்காது என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குறிப்பு: 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி, பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்படாது.

தொடர்புடைய செய்தி