தமிழ்நாட்டில் இன்று (நவ.08) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. காந்தி நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு, கிரசண்ட் அவென்யூ சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆதமங்கலம், புதூர், திருவள்ளூர், கெங்கவரம், கிடம் பாளையம், மேல்சோழங்குப்பம் வீரனூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ள கொள்ளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட, மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் மங்கூன் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பாளையம், குரும்பலூர், மூலக்காடு ஈச்சம்பட்டி புதுஆத்தூர், இலாடபுரம், மேலப்புலியூர். அம்மாபாளையம் களரம்பட்டி, மங்கூன். நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், T. களத்தூர் பிரிவு ரோடு , சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் நேரம் வரை மின் விநியோகம் இருக்காது.
நாகர்கோவில் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட செண்பகராமன் புதூர் துணை மின் நிலையத்தில் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் செண்பகராமன் புதூர், பூதப்பாண்டி, சமத்துவபுரம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
நாமக்கல்: செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால் மண்டபம் போன்ற பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
ஈரோடு மாவட்டத்தில் யூனிட்டி நகர், செட்டியம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சானார்பாளையம், லிங்கப்பக்கவுண்டன் புதூர்,
போக்குவரத்து நகர், குமரன் காலனி கோவில்பதி, கொளப்பலூர், சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி மற்றும் சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
திருப்பூர்: பெருமாநல்லூர் துணைமின்நிலைய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெருமாநல்லூர், பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.