இன்றைய ராசிபலன் (26/02/2024) திங்கட்கிழமை

64510பார்த்தது
இன்றைய ராசிபலன் (26/02/2024) திங்கட்கிழமை
மேஷம்: இன்று அனைத்தும் சுமூகமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். பணப்புழக்கம் அபரிமிதமாக காணப்படும். உங்கள் பணத் தேவைகளை உங்களால் பூர்த்தி செய்து கொள்ள முடியும். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் ஆற்றல் காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: எதிர்மறை விளைவுகளை தடுக்க இந்து எந்த செயலையும் தொடங்குவதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. கண்களில் எரிச்சல்கள் ஏற்படலாம்.

மிதுனம்: இன்று உங்கள் இலக்குகள் குறைந்து காணப்படும். உங்கள் இலக்குகளை அடைய நினைத்தாலும் அதனை செய்து முடிப்பதில் பல கடினங்களை எதிர்கொள்ள நேரும். நிதி வளர்ச்சிக்கு இது சாதகமான நாள் அல்ல. குழந்தைகள் நலனுக்காக செலவு செய்ய நேரும். மன உளைச்சல் காரணமாக இன்று நீங்கள் அமைதியிழந்து காணப்படுவீர்கள்.

கடகம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும். சமநிலையான அணுகுமுறை காணப்படும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் இன்று பணம் சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். இன்று பூரணமான ஆரோக்கியம் காணப்படும். உங்களிடம் சிறந்த ஆற்றல் காணப்படும்.

சிம்மம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். அவநம்பிக்கை மற்றும் பாதுக்கப்பின்மை உணர்வை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்து காணப்படும். அதிக செலவுகள் இருக்கும் காரணத்தால் போதிய அளவு பணம் சேமிக்க இயலாது. பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

கன்னி: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் இந்தச் சூழ்நிலையை நீங்கள் சமாளிக்கலாம். இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். பணத்தை கையாளும்போது கவனம் தேவை. இன்று மிதமான ஆரோக்கியம் காணப்படும். சளித்தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்: இன்றைய நாள் அனுகூலமானதாக இருக்காது. அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும்இருக்க வேண்டியது அவசியம். நிதிநிலைமை இன்று அனுகூலமாக இருக்காது. கூடுதல் செலவினங்கள் காணப்படும். இன்று பதட்டத்துடன் காணப்படுவீர்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

விருச்சிகம்: இன்று உறுதியான நாள். நம்பிக்கையோடு எடுக்கும் முக்கியமான முடிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். பணப்புழக்கம் தேவையைவிட அதிகமாக இருக்கும். பணத்தை சேமித்து பாதுகாப்பை அதிகரிப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும். நேர்மறை எண்ணங்களினால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

தனுசு: இன்று நம்பிக்கையான நாள். உங்கள் இலக்குகளை அடைய இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதிநிலை வளர்ச்சி மகிழ்ச்சியை அளிக்கும். நிதிநிலையில் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க ஏதுவான சூழ்நிலை காணப்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சியில் சில இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரும். இன்று கூடுதல் செலவினங்கள் காணப்படும். இன்று பண வரவிற்கான அதிர்ஷ்டம் குறைவு. முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

கும்பம்: உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை உணர்வுகளை தவிர்க்க வேண்டும். நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. இன்று தேவையற்ற வீணான செலவுகள் காணப்படும். சளி மற்றும் தோல் எரிச்சல்கள் ஏற்படலாம்.

மீனம்: இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நல்ல வளர்ச்சி காணப்படும். உங்களிடம் உள்ள பணம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் உடல் நலத்தை சிறந்த முறையில் பராமரிப்பதால் இன்று சிறந்த ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

தொடர்புடைய செய்தி