இன்றைய ராசிபலன் (22/02/2024)

65677பார்த்தது
மேஷம்: நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று அதிக செலவினங்கள் காணப்படும். நிலையான ஆரோக்கியத்திற்கு உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்: இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். இதனால் எளிதில் வெற்றியை அடையலாம். பணப்புழக்கம் அதிக அளவு காணப்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக நீங்கள் இன்று முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்: தகவல் பரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிக அளவு பணம் தக்க வைத்துக்கொள்ள இந்த நாள் சிறந்த நாளாக இருக்காது. உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. தொண்டை வலியால் அவதிப்பட நேரும்.

கடகம்: இன்று ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் ஆறுதலும் கிடைக்கும். பண விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே கவனமாக இருக்கவேண்டும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.

சிம்மம்: தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவலையை ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கால்களில் விறைப்புத் தன்மை காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி: இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் இலக்கை அடைந்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பணப்புழக்கம் சரளமாக காணப்படும். இன்று சிறந்த முறையில் பணத்தை பராமரிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றம் காண்பீர்கள்.

துலாம்: இன்று உங்கள் விருப்பங்கள் மேம்படும் நாள். சுமகமான பலன்கள் கிடைக்கும் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். இன்று பணம் அதிக அளவில் காணப்படும். பண வரவும் அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும். உங்கள் ஆற்றல் அதிகரித்து காணப்படும்.

விருச்சிகம்: இறை வழிபாடு, ஸ்லோகம் மந்திரம் இவற்றின் மூலம் இன்று ஆறுதல் மற்றும் திருப்தி பெறலாம். இன்று பணத்தை திட்டமிட்டு பராமரிக்க வேண்டும். செலவினங்கள் அதிகரித்து காணப்படும். இன்று காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு: உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு உகந்த நாள் அல்ல. முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க கூடாது அல்லது தள்ளிப்போட வேண்டும். பணம் சேர்ப்பதற்கு குறைந்த வாய்ப்புகளே உள்ளன. இன்று அதிர்ஷ்டம் குறைவான நாள். சளி அல்லது இருமலுக்கான வாய்ப்பு உள்ளது.

மகரம்: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களிடம் காணப்படும் பணம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். மனம் ஸ்திரத்தன்மையுடன் காணப்படும். இதனால் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

கும்பம்: உங்கள் புத்திசாலித் தனத்தை பயன்படுத்தி நீங்கள் உங்கள் செயல்களில் வெற்றி பெறலாம். இன்று நிதிநிலைமை சௌகரியமாக இருக்கும். உங்கள் நிதியைப் பொறுத்தவரை பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். இன்று சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

மீனம்: நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். இன்று பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. குடும்ப பொறுப்புகள் காரணமாக செலவுகள் காணப்படும். தேவையற்ற கவலைகளுக்கு ஆளாவீர்கள்.

தொடர்புடைய செய்தி