இன்றைய ராசிபலன் 20-02-2024 (செவ்வாய்க்கிழமை)

72119பார்த்தது
இன்றைய ராசிபலன் 20-02-2024 (செவ்வாய்க்கிழமை)
மேஷம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் இன்று உங்கள் செயல்களில் தாமதங்கள் ஏற்படும். உங்கள் அணுகுமுறையிலும் திட்டங்களிலும் பொறுமை வேண்டும். இறை வழிபாட்டின் மூலம் மன அமைதி பெறலாம். தொழிலில் லாபம் குறையும். கவனமாக இருப்பது நல்லது. பணப்புழக்கம் ஓரளவு திருப்தி தரும். குழந்தைகளின் கல்வி மேம்படும்.

ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு காணப்படும் பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கன் வேண்டாம். பலவிதமான எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். கண்டிப்பாக நல்லதே நடக்கும். தொலைதூர செய்திகள் மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இணக்கமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது சாத்தியமாகும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயம் எதிர்பார்க்கலாம். பண வரவு தாராளமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும்.

கடகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனளிக்கும். தந்தையின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிய கவலைகள் வேண்டாம். பிரிந்த தம்பதியர் மீண்டும் இணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். சுபகாரிய பேச்சுக்கள் நடக்கும்.

சிம்மம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கலாம். நல்ல பலன் காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணி விஷயத்தில் பாராட்டு கிடைக்கும். நிதிநிலை உயரும்.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். நற்பலன்கள் கிடைக்க சற்று அலைச்சல் ஏற்படலாம். இன்று அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். புதிய நபர்களின் அறிமுகம் வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

துலாம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும். கருவுறுதலுக்காக காத்திருக்கும் தம்பதிகள் தடைகளை தாண்டி வெற்றி பெருவார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்க திட்டமிடுவீர்கள். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று நற்பலன்கள் காண சமநிலையான அணுகுமுறையோடு சூழ்நிலையைக் கையாள வேண்டும். வியாபாரத் துறையில் பணிபுரிபவர்கள் புத்திசாலித்தனமாக விஷயங்களைச் செய்ய வேண்டும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

தனுசு: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக பொறுமை தேவை. நல்ல வாய்ப்புகளை தவறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உறுதியான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். மருத்துவம், கல்வி, போக்குவரத்து, விற்பனை பிரிவுகளில் பணிபுரிபவர்களுக்கு பணப்பலன்கள் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மகரம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வளர்ச்சியில் தடைகள் காணப்படும். வெற்றி காண்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். பதட்டப்படாமல் செயல்களை மேற்கொள்ள வேண்டும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சாதகமான நேரம். எதிரிகளால் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். முக்கிய பணிகளை திட்டமிட்டு முடித்துக் காட்டுவீர்கள்.

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேறுவீர்கள். வெற்றி பெறுவதற்கான ஆற்றல் மற்றும் உறுதி உங்களிடம் காணப்படும். மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களின் திருமணத்தில் சாதகமான முடிவு எடுக்கப்படும். உறவினர்களால் சற்று குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பலன்கள் சாதகமாக இருக்கும். இன்று நல்ல பலன்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக இது மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் நிறைவான நாளாக இருக்கும். பொருள் சேர்க்கை அனுகூலமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி