இன்றைய ராசிபலன் (14/02/20204)

65594பார்த்தது
மேஷம்: உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும்.உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். அதிக பொறுப்புகள் காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படும். இன்று சிறிது பதட்டமாக இருப்பீர்கள். தியானம் மேற்கொள்வதன் மூலம் குணம் பெறலாம். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பண வரவு அதிகமாக இருக்கும். நீங்கள் அதிக பணம் சேமிக்கும் நிலையில் இருப்பீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் முழுமையாக இருக்கும். மிதுனம்: இன்று நற்பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள். கடினமான சூழ்நிலையையும் எளிதாக மேற்கொள்வீர்கள். நீங்கள் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். கடகம்: உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி காண மாட்டீர்கள். புதிய விஷயங்களைக் கற்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் உங்கள் முயற்சிகள் வீணாகும். இன்று நிதி வளர்ச்சிக்கு சாதகமான நாள் அல்ல. மன உளைச்சல் காரணமாக இன்று அமைதியின்மை காணப்படும். சிம்மம்: இன்றைய செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் அன்றாட செயல்களில் கவனம் தேவை. இன்று உங்கள் பிரியமானவரின் ஆரோக்கியத்திற்காக தீடீர் செலவு ஏற்படும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். கன்னி: இன்று நற்பலனகள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துலாம்: இன்று அதிர்ஷ்டம் அதிக அளவு காணப்படும். நீங்கள் எந்தச் செயலை செய்தாலும் அதனை முழுமையாகச் செய்வீர்கள். உங்கள் கடின உழைப்பு காரணமாக இன்று பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. விருச்சிகம்: இன்று சற்று மந்தமான நிலை காணப்படும். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கவும் குறைந்த வாய்ப்பே காணப்படும். கண்களில் பார்வைக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதால் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். தனுசு: இன்று மந்த நிலை காணப்படும். மனக் குழப்பங்கள் காணப்படும். பாதகமான விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க கவனமாக செயலாற்ற வேண்டும். இன்று சில செலவுகள் நேரலாம். அவை தவிர்க்க முடியாததாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்காது. மகரம்: இன்று அபாரமான வாய்ப்பு காணப்படுகின்றது.உங்கள் இலக்குகளை எளிதில் அடைவதற்கான தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் இருக்கும் பணம் உங்களுக்கு போதியதாக இருக்கும். இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். கும்பம்: எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக ஆக்கிக் கொள்ளலாம். இன்று பண வரவு குறைந்து காணப்படும். பண விஷயத்தில் இன்று அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். தூக்கமின்மை காரணமாக பதட்டமும் அதன் காரணமாக தலை வலியும் காணப்படும். மீனம்: இன்று மனதில் பதட்டம் காணப்படும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம். இன்று பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. அதிகரிக்கும் செலவுகளை தவிர்க்க இயலாது. தூக்கமின்மையும் கால் வலி பாதிப்பும் காணப்படும்.

தொடர்புடைய செய்தி