இன்றைய ராசிபலன் (04/02/2024)

56078பார்த்தது
மேஷம்:இன்று முன்னேற்றத்திற்கு உகந்த நாள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக வெற்றி காண்பீர்கள். இன்று உங்கள் நிதிநிலையில் வளர்ச்சி காணப்படும். உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும். உடல்நிலையில் எந்த பாதிப்பும் இருக்காது.

ரிஷபம்: இன்று நீங்கள் வருத்ததுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். மேலும் இன்று பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். இன்று செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படும்.

மிதுனம்: இன்று இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். அதிக பொறுப்புகள் காரணமாக அதிக செலவுகள் காணப்படும். இன்று காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும். அதிக நீரைப் பருகவும்.

கடகம்: இன்று உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று பண வரவு காணப்படும். இன்று எதிர் காலத்திற்காக பணத்தை சேமிப்பீர்கள். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

சிம்மம்: இன்றைய செயல்களின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமைய சிறந்த முறையில் திட்டமிட வேண்டும். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கன்னி: இன்று சில ஏமாற்றங்கள் காணப்படும். அது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். பண வரவு காணப்பட்டலும் அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பதை கடினமாக உணர்வீர்கள். உடல் உழைப்பின் காரணமாக கால் வலி ஏற்படலாம்.

துலாம்: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு இன்று சிறந்தது. இன்று நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது. பரபரப்பான பணிகள் காரணமாக தலைவலி அல்லது கால் வலி ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்று நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பண வரவு காணப்படும். உங்கள் சேமிப்பை உயர்த்துவீர்கள். இன்று ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.

தனுசு: இன்று தடைகளையும் கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். இன்று பண வரவு குறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. தேவையற்ற எண்ணங்கள் காரணமாக குழப்பம் மட்டுமன்றி தலைவலியும் ஏற்படும்.

மகரம்: உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தடைகள் காணப்படும் ஒரு முடிவை செயலாக்குவதற்கு முன் ஒன்றிற்குஇரண்டு முறை யோசிக்க வேண்டும். குடும்ப பிரச்சினை ஒன்றின் காரணமாக உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். இன்று உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: உங்கள் மனதில் காணப்படும் குழப்பம் காரணமாக பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். நிதிநிலைமை அவ்வளவு சிறப்பாக இருக்காது. இன்று கூடுதல் செலவுகள் காணப்படும். இன்று குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கவலை காணப்படும்.

மீனம்: இன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மை எண்ணங்கள் காணப்படும். நிதிநிலைமை முன்னேற்றகரமாக இருக்கும். பூர்வீகச் சொத்து வகையில் எதிர்பாராத பணவரவு காணப்படுகிறது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி