இன்றைய ராசிபலன் (02/03/2024)

56682பார்த்தது
இன்றைய ராசிபலன் (02/03/2024)
மேஷம்: இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் மூலம் இலட்சியங்களை நிறைவேற்றி வெற்றி காண்பீர்கள். இன்று போதிய அளவு பணம் சம்பாதிப்பீர்கள். எதிர்பாராத வகையில் இன்று பண வரவு காணப்படும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்று உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். பயணங்கள் ஏற்படலாம். இன்று நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் சௌகரியங்கள் அதிகரிக்கும். இன்று உங்கள் மனதில் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிபீர்கள்.

மிதுனம்: உங்கள் பணிகளை முடிப்பதை சற்று கடினமாக உணர்வீர்கள். யதார்த்த அணுகுமுறையை கையாள வேண்டும். அதிகரிக்கும் செலவுகள் கவலையை அளிக்கும். அதனைச் சுமையாக உணர்வீர்கள். சளி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்: இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். பொறுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும். இன்று போதிய அளவு பணம் சம்பாதிப்பதை கடினமாக உணர்வீர்கள். மன உளைச்சல் காரணமாக கால்கள் மற்றும் தொடைகளில் வலி காணப்படும்.

சிம்மம்: இன்றைய நாள் சாதகமான நாளாக இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். தொலை தூரத்திலிருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது. அந்தப் பணம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி: இன்று உங்கள் செயல்களை நிர்வகிக்க நீங்கள் திறமையுடன் யோசிக்க வேண்டும். குடும்பப் பிரச்சினைகளும் அதிகரிக்கும் பொறுப்புகளும் கவலையை அளிக்கும். இன்று நிதிநிலைமையில் அனுகூலமான வளர்ச்சி காணப்படாது. தலைவலி அல்லது சளி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எரிச்சல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.

துலாம்: இன்றைய நாள் உங்களுக்கு சரியான செயலுக்கும் தவறான செயலுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பற்றிய படிப்பினையை அளிக்கும். இன்று பண வரவிற்கான வாய்ப்பு இல்லை. பண இழப்புகளை தவிர்க்க நீங்கள் கையிலிருக்கும் பணத்தை சேமிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. அதிகப் பணிகள் காரணமாய் ஏற்படும் மன உளைச்சல் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

விருச்சிகம்: இன்று துடிப்பான நாளாக இருக்காது.உற்சாகம் குறைந்து காணப்படும். மனதில் குழப்பங்கள் காணப்படும். இன்று நிதிநிலைமை அனுகூலமாக இருக்காது. தோல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஆளாவீர்கள். எண்ணெய் பதார்த்தங்களை தவிர்க்கவும்.

தனுசு: இன்று புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் போதிய அளவு பணம் காணப்படும். குடும்ப நலனுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இன்று முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.

மகரம்: இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். இன்று சேமிக்கும் ஆற்றல் பெருகும்.இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

கும்பம்: உங்கள் அன்றாடப் பணிகளை ஆற்றும் பொழுது கவனம் தேவை. இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதனால் உங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது. கால் வலியால் அவதிப்பட நேரலாம்.

மீனம்: இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைவதில் பல தடைகள் காணப்படும். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்காது. செலவுகள் அதிகரித்து காணப்படும். இன்று கால் வலியால் அவதிப்பட நேரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தொடர்புடைய செய்தி