இன்றைய ராசிபலன் 01-03-2024 (வெள்ளிக்கிழமை)

66698பார்த்தது
இன்றைய ராசிபலன் 01-03-2024 (வெள்ளிக்கிழமை)
மேஷம்: இன்று உங்களுக்கு அலுவலகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் சார்ந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணத் தேவையில் எந்த சிக்கலும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். முக்கியமான பணிகளை சிறப்புடன் முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

ரிஷபம்: உங்கள் பணிகளை மேற்கொள்ளும்போது கவனம் தேவை. திட்டமிட்டு பணியாற்றினால் உங்கள் பணிகளை சிறப்பாக செய்ய முடியும். உங்கள் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். சிலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஆலய வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.

மிதுனம்: இன்று உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும். வீட்டில் நடைபெற உள்ள சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். கணவன் - மனைவி இடையே நெருக்கும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். குழந்தைகள் கல்வியிலும், தேர்வுகளிலும் சிறப்புடன் செயல்படுவார்கள்.

கடகம்: இன்று உங்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தன்னம்பிக்கை பிறக்கும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாள். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்படும் நல்லது. சிலருக்கு புதிய வேலை மாற்றம் உண்டாகும், ஒரு சிலருக்கு வேலை பறிபோகவும் வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தேவையான பணம் கிடைத்து விடும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

கன்னி: காதல் வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்க குலதெய்வ வழிபாடு நடத்துங்கள். மூத்த சகோதரியின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம், தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமையல் தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

துலாம்: அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் அதிகமாக இருக்கும். தொலைபேசி மூலம் நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உள்ளது. காதலர்களுக்கு திருமணம் கைகூடும். வீட்டில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்டநாள் கனவுகள் தற்போது கைகூடி வரும்.

விருச்சிகம்: பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வீட்டில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதளவில் குழப்பமாக இருக்கும் விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களால் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களிடம் கவனமாக இருக்கவும். நேரம் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசியினருக்கு இன்று நாள் முழுவதும் ஆறுதல் தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வியாபாரம் போன்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உங்களின் கனவுகள் நிறைவேறும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல வாய்ப்புண்டு. உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கி வந்து சேரும். புதிய நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எதிலும் ஒருவித பதற்றம் இருக்கும். மாலை நேரத்தில் மகிழ்ச்சியான தகவல் தேடி வரும்.

மகரம்: இன்று வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். முடிந்தவரை உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். குடும்பத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்து வந்தாலும் அது சரியாகிவிடும். உங்களின் மன அமைதியை பாதிக்கும் விஷயங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது. தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

கும்பம்: நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டு தைரியமாக சவால்களை எதிர் கொள்ள வேண்டும். பண வரவு குறைந்து காணப்படும், முடிந்த அளவு சேமிப்பதன் மூலம் எதிர்கால பாதுகாப்பு கிடைக்கும். பெண்களுக்கு சிறப்பான நாளாக அமையும். மனதில் உற்சாகமும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆன்மீக பயணமும் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேர்வுகளில் சிறந்து விளங்க அதிக முயற்சி செய்வீர்கள்.

மீனம்: இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படும். திருமணம் பேச்சுவார்த்தை உங்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணவரவு அதிகமாக இருப்பினும், செலவுகளும் சற்று அதிகமாக இருக்கும். எந்தவிதமான ஆரோக்கியக் குறைபாடும் இருக்காது. காதலர்களுக்கு சிறப்பான ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். பணப்பரிவர்த்தனையில் சற்று கவனம் வேண்டும்.

தொடர்புடைய செய்தி