திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதியதாக வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் முகாம் இன்று (30. 07. 2024) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர் மாணவர்களுக்கான வங்கி கணக்கு புத்தகத்தை வழங்கினார்கள்.