இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- சீமான்

73பார்த்தது
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- சீமான்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் ஆா். ரமேஷ்பாபுவை ஆதரித்து நேற்று இரவு பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அண்ணா சிலை எதிரே நடைபெற்ற கூட்டத்தில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் எந்த அரசியல்வாதிகளின் குழந்தைகளாவது அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரியில் படிக்கின்றனரா?. ஆனால், நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசியல்வாதிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்படும்.

காசநோய்க்கான மருந்தை போதிய அளவு வாங்கி சேமித்து வைக்காத மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்றாகிவிட்டது. எனவே, நாம் தமிழா் கட்சிக்கு உங்கள் வாக்குகளை மட்டும் தரவில்லை. இளைஞா்களின் வாழ்க்கையையும் சோ்த்து தருகிறோம் என்று நினைத்து வாக்களியுங்கள்.

நல்ல கல்வி, நல்ல மருத்துவம் தர வேண்டும் என்ற நோக்கம் வாக்காளா்களுக்கு இருக்க வேண்டும். ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை தர முடியவில்லை. நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி