அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய எம்எல் ஏ

64பார்த்தது
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய எம்எல் ஏ
திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும், போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா தலைமையில், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் முன்னிலையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர் அட்டைகளை ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ( *ஒன்றியம் , நகரம், பேரூர்* )கழக செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகரம், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி