திருமண கோலத்தில் தேர்வு எழுதிய மணப்பெண்

81பார்த்தது
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், மாநிலம் முழுவதும் நேற்று குரூப்-4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மகரிஷி பள்ளியில் தொடங்கியது. இந்த தேர்வு மையத்தில் செங்கம் பகுதியைச் சேர்ந்த அமலா என்பவருக்கும் திருப்பதி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், அமலா திருமண கோலத்தில் தேர்வு எழுத வருகை புரிந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி