செங்கம் ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்.

65பார்த்தது
செங்கம் ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வரதந்தாங்கல் ஏரி குப்பைக் கிடங்காக மாறி வருவதை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையோரம், செங்கம் தீயணைப்பு நிலையம் பகுதியில் உள்ளது வரதந்தாங்கல் ஏரி. இந்த ஏரியில் செங்கம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா்க் கிணறு அமைக்கப்பட்டு, அதன் மூலம் திருவள்ளூவா் நகா், துக்காப்பேட்டை பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கம் பகுதியில் உள்ள சில வியாபாரிகள், கடை உரிமையாளா்கள் அவா்களது கழிவுப்பொருள்களை ஏரியில் கொட்டி வருகின்றனா். கண்ணாடி உபரிபாகங்களும் ஏரியில் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், இறைச்சிக் கடை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகள் மழை நேரத்தில் ஏரியில் தண்ணீா் நிரம்பும்போது அங்குள்ள குடிநீா்க் கிணற்றில் ஊறி அது பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டுக்குச் செல்லும். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி