சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை

67பார்த்தது
சேத்துப்பட்டு பேரூராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தின் மையப்ப குதியில் சேத்துப்பட்டு பேரூராட்சி உள்ளது. இங்கு சுமார் 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆரணி சாலையில் பஸ் நிலையம் உள்ளது. இங்கு பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பஸ்கள், பேருந்து நிலையத்திற்குள் வராமல் வெளியிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சேத்துப்பட்டில் உள்ள செஞ்சிசாலை, வந்தவாசி சாலை, போளூர் சாலை என 3 இடங்களில் ஓட் டல்கள் முன்பு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். ஆனால் பஸ் நிலையத்திற்குள் அதி கபட்சம் வருவதை தவிர்க்கின்றனர். இதனால் போக் குவரத்து பாதிக்கிறது. மாற்று பஸ்களில் செல்ல வேண்டிய பயணிகள் பல பஸ் நிலையத்திற்குள் நேரங்களில் தடுமாறுகின்றன.

குறிப்பாக வெளியூரில் இருந்து அமாவாசை மற் றும் பவுர்ணமி நாட்களில் மேல்மலையனூர் மற்றும் திருவண்ணாமலைக்கு சேத்துப்பட்டு வழியாக வரும் பக்தர்கள் குழப்பம் டைகின்றனர். இதேபோல் உள்ளூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதி யோர் உள்ளிட்ட பலர் பாதிக்கின்றனர்.

எனவே அனைத்து பஸ்களையும் சேத்துப் பட்டு பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

தொடர்புடைய செய்தி