திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் முகாம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் ஆரணி, போளூர், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச விட, காலை உணவு திட்டத்தில் பணி, ஏரிக்கரை தார்சாலை வசதி, பேருந்து வசதி, மின்மாற்றி இடமாற்றடம் ஊராட்சிமன்ற தலைவர் மீது புகார் மனு, அணை கட்ட கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
பொதுமக்களிடமிருந்து ஆர்டிஒ மனுக்களை பெற்று விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். உடன் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.