திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளுக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை (2-10-24) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ப. பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடுவதைக்கூடம் செயல்பட தடைவிதிக்கப்படுகிறது. எனவே இன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதைக்கவோ அல்லது இறைச்சிகளை விற்பனை செய்யவோ கூடாது. உத்திரவை மீறி செயல்பட்டால் இறைச்சியை பறிமுதல் செய்து அழிப்பதுடன் உரிமம் இரத்து செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.