உடுமலை: உணவே மருந்து மருந்தே உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

66பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
ஏரி பாளையம் பகுதியில் உள்ள மனவளக்கலை மன்றம் அறிவு திருக்கோயிலிலில் உணவே மருந்து மருந்தே உணவு என்ற தலைப்பில் இயற்கை ஆய்வாளர் தன்ராஜ் பொதுமக்கள் நல்வாழ்வுக்கு பல
நல்ல வாழ்வியல் நடைமுறைகளை விளக்கி கூறினார் மேலும் நிகழ்ச்சியில் உண்ணும் முறை உடற்பயிற்சி யோகா மூலம் நோயிலிருந்து விடுபடவும் நோய் வராமல் பாதுகாக்கவும் மற்றும் கழிவுகளை வெளியேற்ற வழிகாட்டியும் இனிமா எடுத்துக் கொள்ள கொள்வதும் நடைமுறை விதிகள் குறித்து கூறினர். மேலும்
கண் தூய்மைக்கு கண் குவளை பயன்பாடு செயல்முறை செய்து காண்பிக்கபட்டது.
தானிய உணவுகள் பாரம்பரிய உணவுகள் எந்த காலங்களில் எடுத்துக் கொள்வது போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை
கூறி விளக்கம் அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் அறிவித்திருக்கோவில் தலைவர் ஆடிட்டர் ராஜாராம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி, ராஜதுரை, ஆடிட்டர் கண்ணன் மற்றும் மற்ற 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி