திருப்பூர் மாவட்டம் உடுமலை கிறிஸ்தவ ஆலயத்தில்
இன்று மறை மாவட்டத்தின்
தலைவர் செல்வராஜ் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளராக மருத்துவர் ராஜசேகரன் நியமிக்கப்பட்டார்.
மலர் ஸ்டீபன் ஜோசப் , ரூபன் குமார் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்கள். மொத்த வாக்காளர்கள் 60 பேர் இருந்த நிலையில் மலர் ஸ்டீபன் 32 வாக்குகளும் ஜோசப் ரூபன் குமார் 28 வாக்குகளும் பெற்ற நிலையில் மலர் ஸ்டீபன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல பொருளாளர் பதவிக்கு தாராபுரம் பகுதி ஆலயத்தைச் சார்ந்த லிங்கன், குடிமங்கலம் ஆலயத்தைச் சார்ந்த சுதாகர் சிங் போட்டியிட்ட நிலையில் சுதாகர் சிங் 35 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.