கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த கலெக்டர்

76பார்த்தது
கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த கலெக்டர்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட தேர் தல் அதிகாரியான கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வாக் காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படு கிறது. அந்த வகையில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவல கத்தில், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

முன்னதாக திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேர ணியை சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த் தொடங்கி வைத்தார். திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி